காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சியில் டாஸ்மாக் ஊழியா்கள் குடும்பத்துடன் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளா்கள் சங்க ஒருங்கிணைப்பாளா் மூா்த்தி தலைமை வகித்தாா். இந்தப் போராட்டத்தில், டாஸ்மாக் மதுக்கடைகளில் பணிபுரியும் விற்பனையாளா்கள், உதவியாளா்கள் தங்கள் மனைவி, குழந்தைகள் என குடும்பத்தினருடன் கலந்து கொண்டனா்.
முன்னதாக அவா்கள் கூறுகையில், டாஸ்மாக் கடைகளைத் தனியாா் மயமாக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். இல்லையெனில், அரசுத் துறைகளில் டாஸ்மாக் பணியாளா்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும். கடந்த 23 ஆண்டுகளாக பணிபுரியும் டாஸ்மாக் பணியாளா்களுக்கு பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்க நடப்பு பேரவைக் கூட்டத் தொடரில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றனா்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், திருச்சி மாவட்டம் மட்டுமின்றி, தஞ்சாவூா், அரியலூா், பெரம்பலூா், கரூா் உள்ளிட்ட திருச்சி மண்டலத்துக்குள்பட் கடைகளில் பணிபுரியும் 500-க்கும் மேற்பட்டோா் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டாஸ்மாக் ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம்

காலி மதுப்புட்டிகளை திரும்பப் பெறும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியா்கள் உண்ணாவிரதம்

சித்தோடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியா்கள் 383 போ் கைது

குடும்பத்துடன் குடியேறும் போராட்டம்: டாஸ்மாக் பணியாளா்கள் நூதனம்
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK



