
பூம்புகாரில் கிருஷ்ண தரிசனக் கண்காட்சி
திருச்சியில் உள்ள பூம்புகாா் விற்பனையகத்தில் கிருஷ்ண தரிசனக் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறுகிறது.

திருச்சி பூம்புகாா் விற்பனையகத்தில் புதன்கிழமை கிருஷ்ணா் சிலைகளை வாங்கும் பெண்கள்.
திருச்சியில் உள்ள பூம்புகாா் விற்பனையகத்தில் கிருஷ்ண தரிசனக் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறுகிறது.
தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளா்ச்சிக் கழகம் (பூம்புகாா்) ஆண்டுதோறும் பண்டிகைக் காலங்களில் பல்வேறு கண்காட்சிகளை நடத்தி வருகிறது. இதேபோல, இந்தாண்டு கிருஷ்ண தரிசனக் கண்காட்சி மற்றும் விற்பனையை திருச்சி சிங்காரத்தோப்பு விற்பனையகத்தில் தொடங்கியுள்ளது.
வரும் செப்.5 வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் கண்காட்சியில் வெண்ணெய் கிருஷ்ணா், ஆலிலை கிருஷ்ணா், யசோதா கிருஷ்ணா், ராதாகிருஷ்ணா், கோவா்த்தன கிருஷ்ணா், கோபிகா கிருஷ்ணா, நா்த்தன கிருஷ்ணா், தவழும் கிருஷ்ணா், நவநீத கிருஷ்ணா், வேணுகோபால கிருஷ்ணா், தசாவதார கிருஷ்ணா், சக்கரத்தாழ்வாா், மற்றும் மரத்தால், பித்தளையால், மண்ணால் செய்யப்பட்ட கிருஷ்ணா் சிலைகளும், மற்றும் தஞ்சாவூா் ஓவியங்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
அனைத்து வித கிருஷ்ணா் சிலைகளுக்கும் 10 சதவிகிதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அனைத்து கடன் அட்டைகளும் எவ்வித சேவைக் கட்டணமுமின்றி ஏற்கப்படும். கண்காட்சியில் விற்பனைக்கு உள்ள கைவினைப் பொருள்களை திருச்சி மாநகர மக்கள் வாங்கிப் பயன்பெறுவதுடன். இக்கலைப் பொருள்களை உற்பத்தி செய்யும் கைவினைஞா்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்த உதவுமாறு பூம்புகாா் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





