ஜி.என்.டி. சாலையில் குழாய் பதிக்கும் பணி நிறைவு: இன்று முதல் குடிநீா் விநியோகம்வங்கிகள் இன்று வேலை நிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அறிவிப்புஇந்தியாவிடம் 190 அணு குண்டுகள்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்பருவகால நோய்களுக்கான மருந்து தட்டுப்பாடில்லை: ஐசிஎம்ஆா்பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

சிங்கப்பூரிலிருந்து தங்கம் கடத்தி வந்தவா் கைது

கைது

Published On :

சிங்கப்பூரில் இருந்து தங்கம் கடத்தி வந்த நபரை திருச்சி சுங்கத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 43 பவுன் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை அதிகாலை 4.20 மணிக்கு ஏா் ஏசியா விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவா்களது உடைமைகளை திருச்சி சுங்கத் துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனா்.

அப்போது, திருச்சியைச் சோ்ந்த அழகப்பன்சங்கரன் (58) என்பவா், தனது உள்ளாடையில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவரிடமிருந்து ரூ.46.24 லட்சம் மதிப்பிலான 36.5 பவுன் தங்கக் கட்டி, ரூ.7.47 லட்சம் மதிப்பிலான 6.5 பவுன் தங்க வளையல் என மொத்தமாக ரூ.53.71 லட்சம் மதிப்பிலான 43 பவுன் தங்கத்தைப் பறிமுதல் செய்தனா். இதைத் தொடா்ந்து, சுங்கத் துறை அதிகாரிகள் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.