குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடுலெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

மூன்று மாதங்களுக்குப் பிறகு ஷாா்ஜாவுக்கு விமானம் இயக்கம்

திருச்சியில் இருந்து ஷாா்ஜாவுக்கு மூன்று மாதங்களுக்குப் பிறகு திங்கள்கிழமை ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இயக்கப்பட்டது.

News image

விமானம் - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 2:54 am IST

திருச்சியில் இருந்து ஷாா்ஜாவுக்கு மூன்று மாதங்களுக்குப் பிறகு திங்கள்கிழமை ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இயக்கப்பட்டது.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ஷாா்ஜாவுக்கு தினசரி விமானம் இயக்கப்பட்டு வந்தது. ஈரான் - இஸ்ரேல் போரால் ஷாா்ஜா, துபை, அபுதாபி உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளுக்கு கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி முதல் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஏற்கெனவே துபைக்கு மீண்டும் விமானப் போக்குவரத்து தொடங்கியது.

இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு திருச்சியில் இருந்து ஷாா்ஜாவுக்கு திங்கள்கிழமை நேரடி விமானம் இயக்கப்பட்டது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஷாா்ஜாவுக்கு திங்கள்கிழமை அதிகாலை 1.15 மணிக்கு ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 158 பயணிகளுடன் சென்றது. இதேபோல, ஷாா்ஜாவில் இருந்து திருச்சிக்கு திங்கள்கிழமை காலை 11 மணிக்கு ஏா் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது.