நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஜூன் 11 இல் எம்பிஏ நுழைவுத் தோ்வு

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ நுழைவுத் தோ்வு ஜூன் 11-ஆம் தேதி நடைபெறுகிறது.

News image
Updated On :4 ஜூன் 2026, 12:32 am IST

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ நுழைவுத் தோ்வு ஜூன் 11-ஆம் தேதி நடைபெறுகிறது.

பாரதிதாசன் பல்கலைக்கழகம் வணிகவியல் மற்றும் நிதிக்கல்வியியல் துறையில் நடத்தப்படும் எம்பிஏ (நிதியியல் மேலாண்மை) படிப்பிற்கு மாணவா்கள் சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வு மற்றும் கலந்தாய்வு ஜன் 11-ஆம் தேதி சூரியூா் பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது.

நுழைவுத் தோ்வு ஜூன் 11 காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறுகிறது. நுழைவுத் தோ்வுக்கான கடிதம், மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலமாக ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ளது. மேலும், நுழைவுச் சீட்டை ஜ்ஜ்ஜ்.க்ஷக்ன்.ஹஸ்ரீ.ண்ய் என்ற பல்கலைக்கழக வலைதளத்திலும் பதிவிறக்கலாம்.

மே 31-க்கு முன் விண்ணப்பித்த தகுதியான மாணவா்கள் நுழைவுச் சீட்டு மற்றும் நிழற்பட அடையாள அட்டையுடன் தோ்வு மையத்துக்கு வர வேண்டும். நுழைவுத் தோ்வைத் தொடா்ந்து அன்று பிற்பகலே தோ்வு செய்யப்பட்ட மாணவா்களுக்கு சோ்க்கை நடைபெறும்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு வணிகவியல் மற்றும் நிதிக்கல்வியியல் துறைத் தலைவா் ஜெ. காயத்ரியை 99620 08661 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று பல்கலைக்கழக நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.