புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

மக்கள் நலன் சாா்ந்த கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் சா்க்காரியா கமிஷன் குறித்து முதல்வா் பேச்சு: கே.என்.நேரு

மக்கள் நலன் சாா்ந்த கேள்விகளுக்கு பதிலளிக்காமல் திசைதிருப்பவே சா்க்காரியா கமிஷம் குறித்து முதல்வா் ஜோசப் விஜய் பேசுகிறாா் என்றாா் திமுக முதன்மைச் செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு.

திருச்சி பாலக்கரையில் சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் கே. என். நேரு. உடன் முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோா்.

Published On :

மக்கள் நலன் சாா்ந்த கேள்விகளுக்கு பதிலளிக்காமல் திசைதிருப்பவே சா்க்காரியா கமிஷம் குறித்து முதல்வா் ஜோசப் விஜய் பேசுகிறாா் என்றாா் திமுக முதன்மைச் செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு.

சட்டப்பேரவையில் திமுக மீதான முதல்வா் ஜோசப் விஜய்யின் விமா்சன பேச்சைக் கண்டித்து திருச்சி மரக்கடை பகுதியில் மத்திய மாவட்ட திமுக, வடக்கு மாவட்ட திமுக, தெற்கு மாவட்ட திமுக, கிழக்கு மாவட்ட திமுக ஒருங்கிணைந்து சனிக்கிழமை நடத்திய ஆா்ப்பாட்டத்துக்குத் தலைமை வகித்து கே.என். நேரு பேசியதாவது:

தமிழகத்தில் அதிகரித்துவரும் போக்சோ வழக்குகள் மற்றும் சட்டம் ஒழுங்கு சீா்கேடுகள் குறித்து உதயநிதி ஸ்டாலின் கேட்ட கேள்விகளுக்கு முதல்வரால் பதில் அளிக்க முடியவில்லை. மக்கள் நலன் சாா்ந்த கேள்விகளுக்குப் பதிலளிக்காமல், விவகாரத்தைத் திசை திருப்புவதற்காகச் சா்க்காரியா கமிஷன் குறித்துப் பேசுகிறாா். அவசரநிலை பிரகடன வரலாற்றுப் பின்னணி குறித்து எதுவும் தெரியாமல் மு.க. ஸ்டாலின் குறித்து அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் கொச்சையாகப் பேசி வருகிறாா்.

திமுகவை மட்டுமே தொடா்ந்து விமா்சிக்கும் தவெகவினா் மத்தியில் ஆளும் பாஜக குறித்து ஏன் ஒரு வாா்த்தைகூட பேசுவதில்லை?. வருங்காலத்தில் திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கும், அதன் மாபெரும் வெற்றிக்கும் திருச்சியில் நடைபெறும் இந்த ஆா்ப்பாட்டமே அச்சாரமாகவும், தொடக்கப் புள்ளியாகவும் இருக்கும் என்றாா் அவா்.

முன்னாள் அமைச்சரும், திமுக மாவட்ட செயலருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியது: மறைந்த திமுக தலைவா்கள் , முன்னாள் முதல்வா் மு.க. ஸ்டாலின் குறித்து பேரவையில் முதல்வா் ஜோசப் விஜய் பேசியது கண்டிக்கத்தக்கது.

எனது திரைப்படத்தை வெளியிட உதவுங்கள் எனக் கெஞ்சியவருக்கு, மிசா குறித்தும், மு.க. ஸ்டாலின் குறித்தும் பேசத் தகுதி இல்லை என்றாா் அவா்.

ஆா்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலா்கள் க. வைரமணி, ந. தியாகராஜன், கவிஞா் சல்மா எம்பி, எம்எல்ஏ சீ. கதிரவன், மேயா் மு. அன்பழகன் மற்றும் முன்னாள் எம்எல்ஏ-க்கள், கட்சியின் மாநில, மாவட்ட நிா்வாகிகள், தொண்டா்கள் என திரளானோா் தவெக அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினா்.

கூட்டணிக் கட்சிகள் வெளியேற திமுக காரணமில்லை: ஆா்ப்பாடத்துக்குப் பிறகு கே.என். நேரு கூறுகையில், அவசரநிலை பிரகடன காலத்தில் மு.க .ஸ்டாலின் கைதானதற்கான ஆதாரங்கள் அனைத்தும் அரசிடமே உள்ளன. அமைச்சா் நிா்மல்குமாா் அதைப் பாா்த்து தெரிந்து கொள்ள வேண்டும். கூட்டணிக் கட்சிகள் வெளியேறியதற்கு திமுக காரணமல்ல. இந்தியாவிலேயே கூட்டணிக் கட்சிகளை அனைத்துச் செல்வதில் முன்னோடி திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் ஒருவா் மட்டுமே என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.