விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

காப்பீட்டு பிரீமியம் உயர்வு: வாகன உரிமையாளர்கள் அதிர்ச்சி

ஆலங்குளம்,ஏப்.26:÷மத்திய அரசின் பொதுத்துறை பொதுக்காப்பீட்டு நிறுவனங்களும்,தனியார் காப்பீட்டு நிறுவனங்கள்,வாகனக் காப்பீட்டு பிரீமியத்தை உயர்த்தியுள்ளதால்,வாகன உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ÷மே

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:06 am

வை. இராமச்சந்திரன்

ஆலங்குளம்,ஏப்.26:÷மத்திய அரசின் பொதுத்துறை பொதுக்காப்பீட்டு நிறுவனங்களும்,தனியார் காப்பீட்டு நிறுவனங்கள்,வாகனக் காப்பீட்டு பிரீமியத்தை உயர்த்தியுள்ளதால்,வாகன உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

÷மேலும் காப்பீடு பிரீமியம் உயர்வால்,வாகன உரிமையாளர்கள் வாடகைக் கட்டணத்தை உயர்த்த எண்ணி யுள்ளனர்.

÷யுனைடெட்இந்தியா, நியூஇந்தியா, ஓரியண்டல், நேசனல் உள்ளிட்ட மத்திய அரசின் பொதுத்துறை பொதுக்காப்பீட்டு நிறுவனங்களும்,பல்வேறு தனியார் காப்பீட்டு நிறுவனங்களும், வாகனக்காப்பீடு, விபத்துக்காப்பீடு, மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட பொதுக்காப்பீடு சேவைகளை வழங்கி வருகின்றன.

÷வாகனக் காப்பீட்டில்,பேக்கேஜ் பாலிசி,லைபிலிட்டி பாலிசி என இரு வகை உள்ளது.

÷இதில் வாகனங்களுக்கு வழங்கப்படும் காப்பீட்டில்,ஆக்ட்பாலிசி(அ) லைபிலிட்டிபாலிசி என குறிப்பிடப்படும் பாலிசிகளுக்கான பிரீமியத்தை அதிகரித்துள்ளதாக,காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம்(ஐஆர்டிஏ) அறிவித்தது.

÷இதையடுத்து,அரசு பொதுத் துறை பொதுகாப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் பிரீமியம் உயர்வை ஏப்.25 முதல் அமல்படுத்தியுள்ளன. ÷இதில் இருசக்கர வாகனங்கள் முதல் இலகுரக வாகனங்கள்,கனரக வாகனங்கள் என அனைத்து வகையான வாகனங்களுக்கும் பிரீமியம் உயர்த்தப் பட்டுள்ளது.

÷ஏற்கெனவே வசூலிக்கப்பட்ட பிரீமியத்தில் இருந்து, குறைந்தது 10 சதவிகிதத்தில் இருந்து அதிகபட்சமாக 75 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

÷குறிப்பாக இருசக்கர வாகனங்கள், சொந்த உபயோக வாகனங்களைக் காட்டிலும்,வாடகைக்கு இயக்கப்படும் வாகனங்கள், சரக்கு வாகனங்களுக்கு கடுமையாக பிரீமியம் உயர்த்தப்பட்டுள்ளது.

÷இதனால் அத்தகைய வாகனங்களை இயக்குவோர், வாடகை கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளனர்.

÷இதன் மூலம் சுற்றுலா வாகனங்கள்,ஆட்டோக்கள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தும் பொதுமக்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியது வரும்.

÷அதோடு சரக்கு வாகனங்களும் வாடகைக் கட்டணத்தை உயர்த்தும்போது, அதனைப் பயன்படுத்தும் வியாபாரிகள்,அதில் உண்டாகும் கூடுதல் செலவை ஈடுகட்ட,அத்தியாவசிய பொருள்கள் மீது விலை உயர்வு ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியாது.

÷எனவே,காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏ), புதிதாக உயர்த்தப்பட்டுள்ள,வாகனக் காப்பீட்டு பிரீமியம் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கின்றனர் வாகன உரிமையாளர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.