இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஓய்வுபெற்ற பின்னரும் பணியாற்றலாம்

வேலூர், ஜன. 8: கோயில் பணியாளர்கள் ஓய்வுபெற்ற பின்னரும் அதே கோயிலில் பணியாற்றலாம் என இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ப.ரா. சம்பத் தெரிவித்தார்.   இந்து சமய அறநிலையத் துறை ஓய்வுபெற்றோர் சங்கத்தின் 2-வது

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

வேலூர், ஜன. 8: கோயில் பணியாளர்கள் ஓய்வுபெற்ற பின்னரும் அதே கோயிலில் பணியாற்றலாம் என இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ப.ரா. சம்பத் தெரிவித்தார்.

  இந்து சமய அறநிலையத் துறை ஓய்வுபெற்றோர் சங்கத்தின் 2-வது மாநில மாநாடு வேலூர் மாவட்டம், ரத்தினகிரி பாலமுருகன் கோயில் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், சம்பத் பேசியது:

திருப்பணிக்கு என்றும் ஓய்வில்லை. அதுபோல திருக்கோயில் பணியாளர்களுக்கு என்றுமே ஓய்வு கிடையாது.

கோயில் பணியாளர்கள் ஓய்வு பெற்ற பின்னரும் அவர்கள் விரும்பினால் தொடர்ந்து அதே கோயிலில் பணியாற்ற அனுமதிக்கிறோம்.

கோயில் பணி மன நிறைவான பணி. நீங்கள் செய்த புண்ணியத்தால்தான் உங்களுக்கு அறநிலையத் துறையில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது.

  33 ஆண்டுகளாக பல்வேறு பணிகளில் இருந்த எனக்கு தற்போது இந்து சமய அறநிலையத்துறை பணிதான் மனநிறைவை அளிக்கிறது.

  கோயில் செயல் அலுவலர்கள் மக்களுக்கும் ஆண்டவனுக்கும் பாலமாக இருப்பவர்கள். கோயில் சொத்துகளை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு உங்களிடம் உள்ளது. சட்டதிட்டங்களில் சில மாற்றங்கள் கொண்டுவரும்போது கோயில் வளர்ச்சி நன்றாக இருக்கும் என்றார் சம்பத்.

 முன்னதாக, விழா மலரை சம்பத் வெளியிட பாலமுருகனடிமை சுவாமிகள் பெற்றுக்கொண்டார்.

  அறநிலையத் துறை இணை ஆணையர் கோ. பக்கிரிசாமி, சங்கத் தலைவர் சீதரன், பொதுச்செயலர் எஸ். துரைக்கண்ணு, வரவேற்புக் குழுத் தலைவர் எம். கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.