குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில், முன்னாள் மாணவர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (மே 14) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
1964-ல் தொடங்கப்பட்ட கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்கம் அண்மையில் தொடங்கப்பட்டது. இதன் ஆலோசனைக் கூட்டம் கல்லூரி வளாகத்தில் 2 முறை நடைபெற்றது. இப்போது 3-வது முறையாக நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் கல்லூரி நிர்வாகமும், முன்னாள் மாணவர் அமைப்பும் இணைந்து கல்லூரியின் பொன்விழாவை கொண்டாடுவது, முன்னாள் மாணவர் சங்கத்துக்கு நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. எனவே, இக்கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டு ஆலோசனை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இசைத் தளங்களில் ஆதிக்கம் செலுத்தும் அனிருத்தின் ரிவென்ஞ்ச் ராகம்!

நாட்டின் முக்கிய பகுதிகளில் தாக்குதல் நடத்தத் திட்டமா? தில்லியில் 9 பேர் கைது

இந்த சீசன் முழுவதும் நேர்மறையான கிரிக்கெட் விளையாடினோம்: துருவ் ஜுரெல்





