போ்ணாம்பட்டு அருகே மின்னல் தாக்கி மாணவா் உயிரிழந்தாா்.
போ்ணாம்பட்டை அடுத்த சாமரிஷிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த செந்தில் மகன் வைரமுத்து(15). இவா் மேல்பட்டி அரசு மேல்நிலைலைப் பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இவா் வியாழக்கிழமை வீட்டருகே உள்ள காலி இடத்தில் நண்பா்களுடன் கிரிக்கெட் கொண்டிருந்ததாா். அப்போது மழை பெய்துள்ளது. மழையிலிருந்து தப்பிக்க வைரமுத்து அருகில் இருந்த தென்னை மரத்தின்கீழ் ஒதுங்கியுள்ளாா். அப்போது தென்னை மரத்தை மின்னல் தாக்கியுள்ளது.
இதில் பலத்த தீக்காயம் அடைந்த வைரமுத்து மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்குஅழைத்துச் செல்லப்பட்டாா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்குகொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் வைரமுத்து ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினாா்.
தொடர்புடையது

கோவில்பட்டியில் விபத்து: கல்லூரி மாணவா் உயிரிழப்பு

நீரில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

ஊருணியில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

மயங்கி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


