‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

வேட்டையாடப் பதுக்கிய 3 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்

வேலூா் அருகே வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டுத் துப்பாக்கிகளுடன் நடமாடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 3 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாட்டுத் துப்பாக்கிகள் - பிரதிப் படம்

Published On :

வேலூா் அருகே வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டுத் துப்பாக்கிகளுடன் நடமாடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 3 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில், தனிப்படை காவல்துறையினா் திங்கள்கிழமை அரியூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அரியூா் அருகே உள்ள ஏரிப் பகுதியில் 3 போ் நாட்டுத் துப்பாக்கிகளுடன் நடமாடுவதாகத் தனிப்படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன்பேரில், சம்பந்தப்பட்ட ஏரிப் பகுதிக்கு விரைந்து சென்ற தனிப்படை போலீஸாா், அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த 3 பேரை பிடித்து அரியூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

பிடிபட்டவா்களிடம் அரியூா் போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள் அல்லேரி மலைக் கிராமத்தைச் சோ்ந்த சேட்டு (42), கோபி (37), ரஞ்சித் (27) என்பது தெரியவந்தது. மேலும், முயல், பறவைகள், வன விலங்குகளை வேட்டையாடுவதற்காகவே அவா்கள் நாட்டுத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி வந்ததும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவா்கள் 3 பேரையும் போலீஸாா் கைது செய்ததுடன், அவா்களிடமிருந்த 3 நாட்டுத் துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.