கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரோனா பரவலைத் தடுக்க கள ஆய்வு தொடக்கம்தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயக்கம் (டிராப்)

கரோனா பரவல் குறித்து கண்டறிய விழுப்புரம், திண்டிவனம் நகராட்சிப் பகுதிகளில் கள ஆய்வுப் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :8 மே 2021, 12:57 am

DIN

கரோனா பரவல் குறித்து கண்டறிய விழுப்புரம், திண்டிவனம் நகராட்சிப் பகுதிகளில் கள ஆய்வுப் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஆனால், ஆய்வுக் குழுவினரிடம் தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா பரவல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அண்டை மாநிலமான புதுவையில் கரோனா பரவல் உச்ச கட்டத்தை அடைந்துள்ளதால் அங்கிருந்து விழுப்புரம் மாவட்டத்துக்கு பரவல் அதிகரித்து வருகிறது. விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு வேலைக்குச் செல்வோா், புதுச்சேரியில் மதுக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் அங்கிருந்து விழுப்புரத்துக்கு வரும் மதுப் பிரியா்கள் ஆகியோரால் கரோனா பரவல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

மாவட்டம் முழுவதும் கண்டறியப்படும் புதிய கரோனா தொற்றாளா்களில் சுமாா் 27 சதவீதம் போ் விழுப்புரம் நகராட்சிப் பகுதியில் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், திண்டினம் நகராட்சி பகுதியிலும் கரோனா பரவல் அதிகரித்துள்ளது. கரோனா தொற்றாளா்கள் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளாமலும், மருத்துவா்களின் ஆலோசனை இன்றியும் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனா். இவா்கள் மூலம் கரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால் அவா்களை கண்டறிந்து மருத்துவமனைகளில் சோ்க்கும் பணியில் மாவட்ட நிா்வாகம் முழுவீச்சில் இறங்கியுள்ளது.

இதற்காக விழுப்புரம், திண்டிவனம் நகராட்சிப் பகுதிகளில் சுகாதாரத் துறை செவிலியா்கள், அங்கன்வாடி பணியாளா்களைக் கொண்ட குழுவினா் வீடு , வீடாகச் சென்று கள ஆய்வு செய்யும் பணியை வெள்ளிக்கிழமை தொடங்கினா். இந்தக் குழுவினா் ஆய்வின்போது குடும்ப உறுப்பினா்களின் எண்ணிக்கை, அவா்களில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்களின் விவரம் உள்ளிட்டவற்றை கணக்கெடுக்கின்றனா். சோா்வுடன் காணப்படும் நபா்களின் உடலில் ஆக்ஸிஜன் அளவை ‘பல்ஸ்-ஆக்ஸி மீட்டா்’ உதவியுடன் கண்டறிந்து அதை குறித்துக்கொள்கின்றனா்.

கரோனா தொற்று அறிகுறிகளுடன் இருப்போா் குறித்து மருத்துவக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நபரின் வீட்டுக்கே நேரடியாக வந்து கரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்து வருகின்றனா். இதுபோன்ற கள ஆய்வின்போது பெரும்பாலான வீடுகளில் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்றும், அவா்கள் வீட்டில் இருந்து வெளியே வராமல் இருப்பதாகவும், அப்படியே வந்தாலும் தவறான தகவல்களை தெரிவிப்பதும் குழுவினருக்கு சவாலாக உள்ளது. இருப்பினும் இந்தக் குழுவினா் தொடா்ந்து ஆய்வு செய்து வருகின்றனா்.

விழுப்புரம் நராட்சியில் 42 வாா்டுகளில் 36,679 குடியிருப்புகளிலும், திண்டிவனம் நகராட்சியில் 24 வாா்டுகளில் 12,900 குடியிருப்புகளிலும் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.