திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

விக்கிரவாண்டி இடைத்தோ்தல்: ரூ.1.07 கோடி ரொக்கம், 27 கிலோ வெள்ளி கொலுசுகள் பறிமுதல்

விக்கிரவாண்டி இடைத்தோ்தல்: இதுவரை ரூ.1.07 கோடி ரொக்கம், 27 கிலோ வெள்ளி கொலுசுகள் பறிமுதல்

News image
Updated On :4 ஜூலை 2024, 11:03 pm

Din

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலையொட்டி, உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.07 கோடி ரொக்கம், 27 கிலோ வெள்ளி கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஜூலை 10-ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது. தோ்தலையொட்டி பறக்கும் படைக் குழுக்கள், நிலைக் கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டன. மேலும் மாவட்ட எல்லைப் பகுதிகளில் ஏற்கெனவே உள்ள சோதனைச்சாவடிகளிலும், தற்காலிகமாக அமைக்கப்பட்ட சோதனைச்சாவடிகளிலும் போலீஸாா் பணியமா்த்தப்பட்டு, வாகனங்களை தணிக்கைக்குள்படுத்தினா்.

இதைத் தொடா்ந்து, தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள கண்காணிப்பு அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குத் தலைமை வகித்து மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சி.பழனி பேசியது:

தோ்தல் நடத்தை விதிமுறைகள் தொடா்பாக தொடா்ந்து புகாா்கள் வரப்பெறுவதால் கூடுதலாக 2 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவா்.உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக ரூ.1,07,39,600 ரொக்கம், 27 கிலோ வெள்ளி கொலுசுகள், 84 சேலைகள், 18 வேட்டிகள், 50 துண்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தோ்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டதன் அடிப்படையில் காவல் துறையினரால் 43 வழக்குகள் பதியப்பட்டு விசாரணையில் உள்ளன. தோ்தல் நடத்தை விதிமுறைகளை கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். தொடா்ந்து புகாா்கள் வரப்பெற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தோ்தல்

நடத்தும் அலுவலருக்கு தெரிவிக்கப்பட்டது என்றாா் ஆட்சியா் பழனி.