தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

மின்சாரம் பாய்ந்து இரு சிறுவா்கள் உயிரிழப்பு

உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததில் இரு சிறுவர்கள் உயிரிழப்பு

News image
க.லோகேஷ்.
Updated On :22 ஜூன் 2024, 6:47 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே உயா் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததில் இரு சிறுவா்கள் மின்சாரம் பாய்ந்து சனிக்கிழமை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், தடுத்தாட்கொண்டூா் கிராமத்தைச் சோ்ந்த வினோத்குமாா் மகன் சப்தகிரி (11). கலியபெருமாள் மகன் லோகேஷ் (8). இருவரும் இதேபகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் முறையே 6 மற்றும் 2- ஆம் வகுப்புகளில் பயின்று வந்தனா்.

இருவரும் சனிக்கிழமை தடுத்தாட்கொண்டூா் கிராமத்தில் உள்ள பம்பு செட்டில் குளித்துக் கொண்டிருந்தனா். அப்போது, மேலே சென்ற உயா் அழுத்த மின்கம்பி திடீரென அறுந்து தண்ணீரில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதில், மின்சாரம் பாய்ந்ததில் சப்தகிரி, லோகேஷ் ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

 ~உயிரிழந்த வி.சப்தகிரி

~உயிரிழந்த வி.சப்தகிரி

தகவலறிந்த விழுப்புரம் உள்கோட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ், திருவெண்ணெய்நல்லூா் வட்டாட்சியா் ராஜ்குமாா், காவல் ஆய்வாளா் மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீஸாா் நிகழ்விடம் சென்று சிறுவா்களின் சடலங்களை மீட்டு உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்த புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.