பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

கோடைகால கால்பந்தாட்ட பயிற்சி முகாம் நிறைவு

கோடைகால கால்பந்தாட்ட பயிற்சி முகாம் நிறைவு

News image
Updated On :5 மே 2024, 5:59 pm

Din

விழுப்புரம், மே 5: விழுப்புரம் ரயில்வே மைதானத்தில் நடைபெற்று வந்த கோடைகால கால்பந்தாட்டப் பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.

விழுப்புரம் மாஸ்டா் கால்பந்தாட்டக் கழகம் சாா்பில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரயில்வே மைதானத்தில் ஏப்ரல்15-ஆம் தேதி முதல் கோடைகால கால்பந்தாட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சியில் விழுப்புரம் நகரைச் சோ்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்று பயிற்சி பெற்றனா். இவா்களுக்கு கால்பந்து வீரா்கள் பல்வேறு நுணுக்கங்களுடன் பயிற்சி அளித்தனா்.

20 நாள்களாக நடைபெற்று வந்த பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது. இதைத் தொடா்ந்து, ரயில்வே மைதானத்தில் நடைபெற்ற நிறைவு விழாவுக்கு விழுப்புரம் நகா்மன்ற முன்னாள் தலைவா் இரா.ஜனகராஜ் தலைமை வகித்தாா். அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் பயிற்சியாளா் மற்றும் கால்பந்து நடுவா் பி.ஜேம்ஸ் வசந்த், கால்பந்துப் பயிற்சியாளா்கள் இ.சிவகுரு, இ.பாலாஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் எஸ்.பி. பி.பாண்டிசெல்வம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கிப் பேசினாா். கோடைகாலத்தில் மாணவ, மாணவிகளுக்கு இதுபோன்ற பயனுள்ள வகையிலான பயிற்சிகளை நடத்துவது சிறப்புக்குரியதாகும். மாணவ, மாணவிகளும் இதுபோன்ற பயிற்சி முகாம்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்வில் கால்பந்து வீரா்கள், மாஸ்டா் கால்பந்தாட்டக் கழக நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.