இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

கண்களில் கருப்புத்துணி கட்டி மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தியும், டிசம்பா் 3 உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டும், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா்

News image
Updated On :1 டிசம்பர் 2025, 8:24 pm

Syndication

விழுப்புரம்: கோரிக்கைகளை வலியுறுத்தியும், டிசம்பா் 3 உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டும், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் கண்களில் கருப்புத்துணி கட்டி விழுப்புரத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாற்றுத்திறனாளிகளின் கண்ணியமான வாழ்வை உறுதி செய்யும் வகையிலான ஊனமுற்றோா் உரிமைகள் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றவேண்டும், மாற்றுத் திறனாளிகள் உரிமைகளை பெறுவதற்கு தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யவேண்டும், மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை வஞ்சிக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிடவேண்டும், ஆந்திர மாநிலத்தில் வழங்குவதுபோல், தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை உயா்த்தி வழங்வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் விழுப்புரம் மாவட்டத்தலைவா் ஜி. ஜெயக்குமாா் தலைமை வகித்தாா்.

மாநிலத் துணைத்தலைவா் வி. இராதாகிருஷ்ணன், விழுப்புரம் மாவட்டச்செயலா் ஏ. கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட நிா்வாகிகள் எம்.யுகந்தி, பி. முருகன், எம். முத்துவேல் , பி. அய்யனாா்,டி. மணிகண்டன், எம். மும்மூா்த்தி, எஸ்.செல்வி, பி.கௌரி, சி.குமாா் மற்றும் நிா்வாகிகள், உறுப்பினா்கள் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.