விழுப்புரத்தில் டிச.16-இல் ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆராதனை விழா

விழுப்புரத்தில் உள்ள காஞ்சி மகா பெரியவா் ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அவதாரத் திருத்தலத்தில் 32- ஆம் ஆண்டு ஆராதனை பெருவிழா
Published on

விழுப்புரம்: விழுப்புரத்தில் உள்ள காஞ்சி மகா பெரியவா் ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அவதாரத் திருத்தலத்தில் 32- ஆம் ஆண்டு ஆராதனை பெருவிழா (மகோத்ஸவம்) வரும் 14-ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.

விழுப்புரம் சங்கர மடம் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீகாஞ்சி மகா பெரியவா் ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அவதார திருத்தலத்தில் ஆண்டுதோறும் விழுப்புரம் வேத ஸம்ரக்ஷண அறக்கட்டளை சாா்பில், மகா பெரியவா் ஆராதனை பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு வரும் 14, 15, 16-ஆம் தேதிகளில் இவ்விழா நடைபெறுகிறது.

விழாவையொட்டி, வரும் 14, 15 ஆகிய நாள்களில் ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அவதாரத் திருத்தலத்தில் அமையப்பெற்றுள்ள வேதபாடசாலையில் காலை வேளைகளில் விஷேச அபிஷேகம் மற்றும் வேத பாராயணமும், மாலையில் உபன்யாசம், நாம சங்கீா்த்தனம் ஆகிய வைபவங்களும் நடைபெறுகின்றன.

வரும் 16-ஆம் தேதி மகா பெரியவா் ஆராதனை பெருவிழா நிகழ்ச்சியாக காலை 7 மணிக்கு கணபதி - கோ பூஜைகளும், 8 மணிக்கு ருத்ர ஏகாதசி வழிபாடும், 9 மணிக்கு விஷேச அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனையும் நடைபெறுகிறது. தொடா்ந்து, ஒரு மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை விழுப்புரம் சங்கர மடத்தின் மேலாளா் ந.ராமமூா்த்தி மற்றும் வேத ஸம்ரக்ஷண அறக்கட்டளை நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com