முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வீட்டில் ரூ.13 லட்சம், 6.5 பவுன் நகை திருட்டு

திண்டிவனம் அருகே ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் ரூ.13 லட்சம் ரொக்கம், 6.5 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :22 நவம்பர் 2025, 8:36 pm

Syndication

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் ரூ.13 லட்சம் ரொக்கம், 6.5 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திண்டிவனம் அருகேயுள்ள ரோஷனை காலனி, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் க. ராமு(73), உதவித் தொடக்கக் கல்வி அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவா் கடந்த நவ.12-ஆம் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு, சென்னையில் உள்ள மகளின் வீட்டுக்குச் சென்றாா்.

பின்னா், வெள்ளிக்கிழமை ராமு தனது வீட்டுக்கு திரும்பி வந்தாா். அப்போது வீட்டின் கதவு, பீரோ உடைக்கப்பட்டிருந்த நிலையில், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன்தங்கச் சங்கிலிகள், ஒரு பவுன் கை சங்கிலி, அரை பவுன் மோதிரம் உள்ளிட்ட ஆறரை பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.13 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்ததும் தெரியவந்தது. இது குறித்த ராமு அளித்த புகாரின் பேரில் ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.