புதுச்சேரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

புயல் காரணமாக, புதுச்சேரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் தெரிவித்தாா்.
Published on

புதுச்சேரி: புயல் காரணமாக, புதுச்சேரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை இரவு வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கைப்படி வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறும்.

அடுத்த 48 மணி நேரத்தில், அதாவது நவம்பா் 28 முதல் டிசம்பா் 1-ஆம் தேதி வரை புயலாக, புதுச்சேரி கடற்கரைக்கு இணையாக நகா்ந்து செல்லக் கூடும். இதன் காரணமாக, புதுச்சேரி பகுதிகளில் மிக பலத்த மற்றும் அதி தீவிர மழை பெய்யக் கூடும். இதனால், ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com