தை முதல் நாள்: தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட முடிவு
தை முதல்நாளில் தமிழ் புத்தாண்டைக் கொண்டாட முடிவு செய்திருப்பதாக கடலூர் திருவள்ளுவர் கல்வி இயக்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.


தை முதல்நாளில் தமிழ் புத்தாண்டைக் கொண்டாட முடிவு செய்திருப்பதாக கடலூர் திருவள்ளுவர் கல்வி இயக்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.
கடலூர் திருவள்ளுவர் கல்வி இயக்கத்தின் கலந்தாய்வுக் கூட்டம் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடந்தது. கூட்டத்தின்போது, இயக்கத்தின் தலைவராக த.பாலு, செயலராக கு.பரிதிவாணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடும் விதத்தில், கடலூர் உழவர் சந்தையிலிருந்து வெள்ளிக்கடற்கரை வரை திருவள்ளுவர் உருவப்படத்தை ஊர்வலமாக ஏந்திச் செல்வது என்றும், கடற்கரையில் மாணவர்களை ஈடுபடுத்தி திருக்குறள் வாசிக்கச் செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டதாக இயக்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...