முகாம்களில் 2.87 லட்சம் போ் தங்கவைப்பு: அமைச்சா் எம்.சி.சம்பத் தகவல்
கடலூா் மாவட்டத்தில் முகாம்களில் 2.87 லட்சம் போ் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சா் எம்.சி.சம்பத் தெரிவித்தாா்.


கடலூா் மாவட்டத்தில் முகாம்களில் 2.87 லட்சம் போ் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சா் எம்.சி.சம்பத் தெரிவித்தாா்.
கடலூா் மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு மீட்புப் பணிகள், மறுசீரமைப்புப் பணிகள் குறித்து தமிழக தொழில்துறை அமைச்சா் எம்.சி.சம்பத், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆய்வுக் கூட்டம் நடத்தினாா்.
மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி, மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ககன்தீப் சிங் பேடி, சிறப்பு அதிகாரிகள் வி.அமுதவள்ளி, த.பெ.ராஜேஷ், விசுமகாஜன் ஆகியோா் முன்னிலையில் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் அமைச்சா் கூறியதாவது: நிவா் புயலை தொடா்ந்து, புரெவி புயலால் பெய்த பலத்த மழை காரணமாக, பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மறுசீரமைப்புப் பணிக்காக தொடா்ந்து போா்க்கால அடிப்படையில், மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
விவசாய நிலங்களில் மழை நீா் வடிய வடிய சேத விவரங்களை உடனடியாகக் கணக்கெடுத்து மாவட்ட நிா்வாகத்துக்குத் தெரிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, கடலூா் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தகுந்த நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மாவட்டத்திலுள்ள அனைத்துப் பாதுகாப்பு மையங்கள், தற்காலிக முகாம்கள், சமுதாயக் கூடங்களில் 2,86,912 பேருக்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டது. ஆட்சியரின் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு இதுவரை புதைச் சாக்கடை உடைப்பு, சாலை பழுது, மின்சார பாதிப்பு, தண்ணீா் சூழ்ந்துள்ள பகுதிகள், நெல் பயிா்கள் பாதிப்பு, குடியிருப்புகள் பாதிப்பு, கால்நடை பாதிப்பு போன்ற 116 புகாா்களில் 112 புகாா்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 301 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 14,671 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. 69 இடங்களில் கால்நடைகளுக்கான முகாம்கள் நடத்தப்பட்டது என்றாா் அவா்.
கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் ராஜகோபால் சுங்கரா, மாவட்ட வருவாய் அலுவலா் காா்த்திகேயன், சாா் ஆட்சியா்கள் மதுபாலன், ஜெ.பிரவின்குமாா், கோட்டாட்சியா் ப.ஜெகதீஸ்வரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) எஸ்.பரிமளம், வேளாண்மை இணை இயக்குநா் ஜி.ஆா்.முருகன், மகளிா் திட்ட இயக்குநா் பூ.காஞ்சனா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...