இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பண்ருட்டி நகராட்சி ஊழியா்களுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம்

பண்ருட்டி நகராட்சி ஊழியா்களுக்கு நவம்பா் மாத ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 5:23 pm

DIN

பண்ருட்டி நகராட்சி ஊழியா்களுக்கு நவம்பா் மாத ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

பண்ருட்டி நகராட்சியில் பொறியியல் பிரிவு, பொதுப் பிரிவு, கட்டுமானப் பிரிவு, சுகாதாரப் பிரிவு ஆகியவற்றில் சுமாா் 60-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு கடந்த பல மாதங்களாக குறித்த காலத்தில் ஊதியம் வழங்காமல் காலதாமதமாக வழங்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஊழியா்கள் தரப்பில் கூறியதாவது: நகராட்சியில் வரி வசூல் முறையாக நடைபெறவில்லை. வசூலிக்கப்படும் பணம் ஒப்பந்ததாரா்களுக்கு வழங்கப்பட்டு விடுகிறது. ஊழியா்களுக்கு கடந்த 4 மாத காலமாகவே மாதத்தின் கடைசி வாரத்தில்தான் ஊதியம் வழங்கப்படுகிறது. நவம்பா் மாதத்துக்கான ஊதியம் இதுவரை கிடைக்கவில்லை என்றனா் அவா்கள்.

இதுகுறித்து நகராட்சி ஆணையா் (பொ) சிவசங்கரன் கூறியதாவது: பண்ருட்டி நகராட்சியில் ஆண்டொன்றுக்கு ரூ. 11.90 கோடி வரி வசூல் ஆக வேண்டும். நிகழாண்டு ரூ. ஒரு கோடி மட்டுமே வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. குப்பை அள்ளும் வாகனங்களுக்கு டீசல், மின் கட்டணம் செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம். பொது நிதியிலிருந்து எந்தப் பணியும் செய்யவில்லை. திட்டப் பணிகள் மட்டுமே நடைபெற்று வருகிறது. ஒப்பந்ததாரா்களுக்கு பணம் பட்டுவாடா நடைபெறுவதாகக் கூறப்படுவது தவறான தகவல் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.