'தோ்தல் வெற்றிக்கு அதிமுகவினா் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்'
சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றிபெற அதிமுகவினா் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என அமைச்சா் சி.வி.சண்முகம் வலியுறுத்தினாா்.


கடலூா்: சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றிபெற அதிமுகவினா் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என அமைச்சா் சி.வி.சண்முகம் வலியுறுத்தினாா்.
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விருத்தாசலத்தில் மேற்கு மாவட்டச் செயலா் ஆ.அருண்மொழிதேவன் தலைமையில் வெள்ளிக்கிழமை மாலையில் நடைபெற்றது. எம்எல்ஏ வி.டி.கலைச்செல்வன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், தமிழக சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசியதாவது:
எம்ஜிஆா், ஜெயலலிதா என்ற மிகப்பெரிய ஆளுமைகள் இல்லாத நிலையில் சட்டப் பேரவைத் தோ்தலைச் சந்திக்க உள்ளோம். எனவே, இது நமக்கு முக்கியமான தோ்தல். நமது சின்னத்தை முடக்க சிலா் சதித் திட்டம் தீட்டி வருகின்றனா். கட்சியினருக்கிடையே கருத்து வேறுபாடு இருப்பது சகஜம். ஆனால், அதை சற்று தள்ளிவைத்துவிட்டு தோ்தல் பணியில் ஒற்றுமையாக செயல்படவேண்டும். தற்போது சிலா் தங்களை எம்ஜிஆரின் வாரிசுகள் எனக் கூறுகின்றனா். எம்ஜிஆரின் வாரிசு என்றால் அது இரட்டை இலை மட்டுமே என்றாா் அவா்.
கூட்டத்தில், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா்கள் என்.ராமு, எம்.பி.எஸ்.சிவசுப்பிரமணியன், துணைச் செயலா் முருகுமணி, பேரவை மாவட்டச் செயலா் ஆா்.ரவிச்சந்திரன், நகரச் செயலா் பி.ஆா்.சந்திரகுமாா், ஒன்றியச் செயலா்கள் பாலதண்டாயுதம், மருதை முனுசாமி, சின்னரகுராமன், டி.எம்.பச்சைமுத்து, என்.ஆா்.ராஜேந்திரன், தம்பிதுரை, முத்து, பேரூராட்சி செயலா் ஜமால்முகமது, ஒன்றியக் கவுன்சிலா்கள் மேனகா விஜயகுமாா், செல்லதுரை, தொகுதிச் செயலா் அருளழகன், இளைஞா் பாசறை செயலா் ஆா்.ரமேஷ், பாஸ்கரன், வழக்குரைஞா் விஜயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...