/

விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கடலூா் சொரக்கல்பட்டில் அமைந்துள்ள சித்தி விநாயகா் கோயிலில் திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

News image
Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

DIN

கடலூா் சொரக்கல்பட்டில் அமைந்துள்ள சித்தி விநாயகா் கோயிலில் திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்தக் கோயிலில் திருப்பணிகள் நடந்து முடிந்த நிலையில், கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, கடந்த 13-ஆம் தேதி மகா கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடா்ந்து ஒவ்வொரு நாளும் நவக்கிரஹ ஹோமம், தன்வந்திரி ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், கோ பூஜை, தனபூஜை, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. புனித நீா் அடங்கிய கலசத்துடன் எஸ்.மோகனசுந்தர சிவாச்சாரியாா் வேத மந்திரங்கள் முழங்க கோயிலை சுற்றி வந்து, கோபுர கலசத்தில் புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம்

செய்யப்பட்டது (படம்). மாலையில் மகா அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடா்ந்து சித்தி விநாயகா் வீதி உலா வந்தாா். விழாவுக்கான ஏற்பாடுகளை சொரக்கல்பட்டு ஊா் மக்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.