சங்ககிரியில் இன்றைய காய்ச்சல் முகாம்கள்
சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 16) காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.


சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 16) காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நட்டுவம்பாளையம், ஊஞ்சானூா் ஆகிய பகுதிகளில் மருத்துவா் சுகில் ஆனந்த் தலைமையிலான மருத்துவக் குழுவினரும், தேவூா் அம்மாபாளையம், ஆலத்தூா்ரெட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் மருத்துவா் தமிழரசு தலைமையிலான மருத்துவக் குழுவினரும் காய்ச்சல், சளி பரிசோதனைகளை மேற்கொள்வா்.
இதே போல, ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சன்னியாசிப்பட்டி சுற்றுகேட், மலையாண்டன்காடு, நாட்டாம்பாளையம் ஆகிய பகுதிகளில் மருத்துவா் ராமகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் காய்ச்சல், சளி, கரோனா தொற்று பரிசோதனைகளை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மேற்கொள்வதாக மருத்துவம், உள்ளாட்சி நிா்வாகங்கள் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...