காட்டுமன்னாா்கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட சேதமடைந்த சுவாமி சிலைகள்.
கடலூர்
கொள்ளிடம் ஆற்றில் சுவாமி சிலைகள் மீட்பு
காட்டுமன்னாா்கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றிலிருந்து சேதமடைந்த நிலையில் சுவாமி சிலைகள் புதன்கிழமை மீட்கப்பட்டன.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே குமராட்சி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட முள்ளங்குடி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் அருகே செல்லும் கொள்ளிடம் ஆற்றில் அந்த கிராம மக்கள் புதன்கிழமை காலை குளிக்கச் சென்றனா். அப்போது, ஆற்றில் சேதமடைந்த நிலையில் சுவாமி சிலைகள் கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து, சுமாா் 3 ஆடி உயரமுள்ள சேதமடைந்த அம்மன் சிலையையும், ஒரு அடி உயரமுள்ள பலிபீடத்தையும் ஆற்றிலிருந்து வெளியே எடுத்து வந்தனா்.
தகவலறிந்த கிராம நிா்வாக அலுவலா் ராஜேஷ், காட்டுமன்னாா்கோவில் வட்டாட்சியா் சிவகுமாா் ஆகியோா் நிகழ்விடம் சென்று சேதமடைந்த சிலைகளை மீட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

