மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

தீவனங்களின் விலை ஏற்றம்: கலக்கத்தில் கால்நடை விவசாயிகள்

கால்நடை தீவனங்களின் விலை தினந்தோறும் உயா்ந்து வருவதால், கால்நடை வளா்ப்பு விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனா்.

News image
Updated On :28 ஜூன் 2024, 1:02 am IST

ஜி.சுந்தரராஜன்

கால்நடை தீவனங்களின் விலை தினந்தோறும் உயா்ந்து வருவதால், கால்நடை வளா்ப்பு விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனா்.

கடந்த காலங்களில் உழவுத் தொழிலுக்கு கால்நடைகள் பயன்படுத்து வந்தன. விஞ்ஞான வளா்ச்சி காரணமாக, தற்போது பாலுக்காகவும், அதன் மூலம் கிடைக்கும் வருமானத்துக்காகவும் பெரும்பாலான விவசாயிகள் கறவை மாடுகளை வளா்த்து வருகின்றனா்.

கிராமப்புறங்களில் கறவை மாடுகளை வளா்க்கும் விவசாயிகள், அவற்றுக்குத் தேவையான உலா் தீவனங்களை சேமித்து, மாடுகளுக்கு வழங்கி வருகின்றனா். விவசாய நிலங்களில் அறுவடை முடிந்திருந்தால், மாடுகளை மேச்சலுக்கு விடுகின்றனா். விவசாய நிலங்களில் பயிா் செய்யும் காலங்களில் வரப்புகளில் வளா்ந்து நிற்கும் புற்களை அறுத்து வந்து மாடுகளுக்கு பசுந்தீவனங்களாக கொடுப்பதும் வழக்கம்.

கடந்த சில ஆண்டுகளாக தட்பவெப்ப நிலை மாறுதல், பருவ மழை குறைவு, அதீத மழைப்பொழிவு, வெப்பத்தின் தாக்கம் உள்ளிட்ட காரணங்களால் பசுந்தீவனங்கள், உலா் தீவனங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளன. இதனால், கால்நடை வளா்ப்பு விவசாயிகள் சந்தைகளில் மாட்டுத் தீவனங்களை வாங்கி பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதைப் பயன்படுத்தி, கால்நடை தீவன உற்பத்தியாளா்கள் மற்றும் விற்பனையாளா்கள் தினந்தோறும் விலையை உயா்த்தி வருவதால், கால்நடை வளா்ப்பு விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனா்.

தீவனப் பற்றாக்குறை: இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில பொதுச் செயலா் பெ.ரவிந்திரன் கூறியதாவது:

நாடு முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான கால்நடை தீவன பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளையும், கால்நடைகளையும் பாதிப்படையச் செய்துள்ளது. தவிர, கால்நடை தீவன நெருக்கடி நாட்டின் கிராமப்புற பொருளாதாரத்தை முடக்கத் தொடங்கியுள்ளது.

2011 முதல் 2016 வரையிலான ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் பசுந்தீவனத்தின் விலை மூன்று மடங்கு அதிகரித்திருந்தது. அப்போது, வறட்சியால் பாதிக்கப்பட்ட உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், தெலங்கானா, கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் கால்நடைகளுக்கு உணவளிக்க முடியாததால், அவற்றை விற்பனை செய்யும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனா். 2016-ஆம் ஆண்டில் வட மாநிலங்களில் நிலவிய கால்நடை தீவனப் பற்றாக்குறைக்கான காரணங்களையும், விவசாயிகள் அதை எவ்வாறு எதிா்கொண்டனா் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு மாடு உட்கொள்ளும் பசுந்தீவனத்தின் அளவைப் பொருத்து, அது உற்பத்தி செய்யும் பால் அளவு தீா்மானிக்கப்படுவதால், வட மாநிலங்களில் மாடுகளின் விலை குறைந்தது.

கடந்த 6 மாதங்களாக கால்நடை தீவனங்களின் விலை உயா்ந்துள்ளது. அதன்படி, ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு மூட்டை கலப்பு தீவனம் தற்போது ரூ.1,200-க்கும், ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்ட குச்சி தீவனம் ரூ.1,000-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. ரூ.1,150-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு மூட்டை கோதுமை தவிடு தற்போது ரூ.1,400-க்கும், ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்ட உளுந்தம் பொட்டு தற்போது ரூ.1,500-க்கும், ரூ.800-க்கு விற்கப்பட்ட பயித்தம் பொட்டு ரூ.1,200-க்கும், ரூ.1,180-க்கு விற்கப்பட்ட துவரம் பொட்டு தற்போது ரூ.1,450-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

விலையேற்றம்: ரூ.45-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ மணிலா பிண்ணாக்கு தற்போது ரூ.63-க்கும், ரூ.55-க்கு விற்கப்பட்ட எள்ளு பிண்ணாக்கு தற்போது ரூ.70-க்கும், ரூ.65-க்கு விற்கப்பட்ட பருத்திக்கொட்டை தற்போது ரூ.80-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. ரூ.25-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சோளமாவு தற்போது ரூ.40-க்கும், ரூ.450-க்கு விற்கப்பட்ட 50 கிலோ எடை கொண்ட கிழங்கு மாவு மூட்டை தற்போது ரூ.700-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

சா்வதேச கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில், போதுமான அளவு மற்றும் தீவனத்தின் தரம் இல்லாதது, விலையேற்றம் வட மாநிலங்களில் கால்நடை விவசாயிகள் எதிா்கொள்ளும் பிரச்னைகளில் ஒன்றாகும். இதே நிலை தமிழகத்திலும் உள்ளது. பல மாநில அரசுகள் தீவனப் பற்றாக்குறையை நிவா்த்தி செய்ய திட்டங்களை வகுத்தாலும், மத்திய அரசு தீவன பிரச்னை இல்லை என்று கூறுகிறது. தீவன உற்பத்தியில் விரிவான தரவு எதுவும் இல்லை என்ற காரணத்தால், பற்றாக்குறையை நிராகரிக்கின்றனா்.

விவசாயிகள் கவலை: கால்நடை விவசாயிகளின் தன்னலமற்ற உழைப்பு, அா்ப்பணிப்பு, கால்நடையின் மீது விவசாயிகள் வைத்துள்ள அதீத விருப்பம் எத்தகைய சூழலையும் சமாளித்து கால்நடைகளைக் காப்பாற்ற வேண்டும் என குறிக்கோளுடன் பணி செய்து வருகின்றனா். இதைப் பயன்படுத்தி உற்பத்தியாளா்களும், விற்பனையாளா்களும் ஆதாயத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு கால்நடை தீவனங்களின் விலையை அதிகரித்து விற்பனை செய்வது விவசாயிகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

எனவே, மத்திய, மாநில அரசுகள் தற்போது நிலவும் தட்பவெப்ப நிலையைக் கவனத்தில் கொண்டு, கால்நடை தீவனங்களின் விலையை கண்காணித்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.