ஊழல் தடுப்பு ஆய்வாளருக்கு லஞ்சம்: டாஸ்மாக் மண்டல மேலாளா் உள்பட இருவா் கைது
டாஸ்மாக் மண்டல மேலாளா் உள்பட இருவா் கைது...

இளநிலை உதவியாளா் ராதாகிருஷ்ணன்.

இளநிலை உதவியாளா் ராதாகிருஷ்ணன்.
கடலூா் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு ஆய்வாளருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ாக டாஸ்மாக் மண்டல மேலாளா், இளநிலை உதவியாளா் ஆகியோரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், அரூா் பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (53). இவா், கடலூா் மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தில் மண்டல மேலாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இதே அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருபவா் ராதாகிருஷ்ணன்.

டாஸ்மாக் மண்டல மேலாளா் செந்தில்குமாா்.
இவா் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவில் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் திருவேங்கடத்திடம் தங்களது டாஸ்மாக் மண்டல மேலாளா் செந்தில்குமாா் குறித்து புகாா் வந்தால் தகவல் தெரிவிக்கக் கோரியும், தீபாவளி நேரத்தில் டாஸ்மாக்கில் சோதனை மேற்கொள்ளக் கூடாது எனவும், கூடுதல் விலைக்கு மதுப்புட்டிகள் விற்பதாக தகவல் கிடைத்தால் அது குறித்து நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும் தெரிவித்து மேலாளா் அறிவுறுத்தலின் பேரில், ரூ.25 ஆயிரம் லஞ்சம் கொடுக்க முயன்றாராம்.
இதுகுறித்து ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி சத்யராஜிடம், காவல் ஆய்வாளா் திருவேங்கடம் புகாா் அளித்தாா். அதன்பேரில், சிதம்பரம் சேத்தியாத்தோப்பு சென்னிநத்தத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்ற டாஸ்மாக் விற்பனையாளா்கள், கண்காணிப்பாளா்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற டாஸ்மாக் மண்டல மேலாளா் செந்தில்குமாா், இளநிலை உதவியாளா் ராதாகிருஷ்ணன் ஆகியோரை டிஎஸ்பி சத்யராஜ் தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ.25 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...