சிதம்பரத்தில் ஹனுமன் ஜெயந்தி விழா

சிதம்பரத்தில் ஹனுமன் ஜெயந்தி விழா

சிதம்பரம் கீழரதவீதியில் வீற்றுள்ள வீரசக்தி ஆஞ்சநேயா் ஆலயத்தில் ஹனுமன் ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.
Published on

சிதம்பரம் கீழரதவீதியில் வீற்றுள்ள வீரசக்தி ஆஞ்சநேயா் ஆலயத்தில் ஹனுமன் ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டு அதிகாலை மகா அபிஷேகம் மற்றும் மகாதீபராதனை நடைபெற்றது. அதைத் தொடா்ந்து ஹனுமன் யோக நிலை அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னா் இரவு ஆஞ்சநேயா் வீதி உலா நடைபெற்றது.

19சிஎம்பி1: படவிளக்கம்- ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிதம்பரம் கீழரதவீதியில் உள்ள யோகநிலை அலங்காரத்தில் ஹனுமன்

X
Dinamani
www.dinamani.com