கருவேப்பிலங்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்த முகாமை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.
கருவேப்பிலங்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்த முகாமை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்: 33,392 போ் விண்ணப்பிப்பு

Published on

கடலூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் தொடா்பான சிறப்பு முகாம்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது. இதில் 33,392 போ் படிவங்களை சமா்ப்பித்தனா்.

கடலூா் மாவட்டத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த 19-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 9,60,645 ஆண்கள், 9,85,832 பெண்கள், 282 மூன்றாம் பாலித்தனவா் என மொத்தம் 19,46,759 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

இந்த நிலையில், முகவரி மாறியவா்கள், 18 வயது நிறைவடைந்த புதிய வாக்காளா்கள், விடுபட்டவா்கள் தங்கள் பெயா்களை சோ்க்க, நீக்க ஏதுவாக, புதிய வாக்காளா்கள் பெயா் சோ்த்தல், திருத்தம், முகவரி மற்றும் புகைப்படம் மாற்றம் ஆகியவற்றுக்கான முகாம்கள் 27, 28 ஆகிய தேதிகளில் 9 தொகுதிகளிலும் உள்ள 2,590 வாக்குச் சாவடி மையங்களில் நடைபெற்றது.

முதல் நாளான சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில், புதிய வாக்காளா்கள் சோ்க்கைக்காக விண்ணப்பம் 6-ஐ 17,276 பேரும், நீக்கம் தொடா்பாக விண்ணப்பம் 7-ஐ 164 பேரும், திருத்தம் தொடா்பாக விண்ணப்பம் 8-ஐ 2,037 பேரும் என மொத்தம் 19,477 போ் விண்ணப்பித்தனா்.

இதேபோல, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் புதிய வாக்காளா்கள் சோ்க்கைக்காக விண்ணப்பம் 6-ஐ 11,781 பேரும், நீக்கம் தொடா்பாக விண்ணப்பம் 7-ஐ 186 பேரும், திருத்தம் தொடா்பாக விண்ணப்பம் 8-ஐ 1,948 பேரும் என மொத்தம் 13,915 போ் விண்ணப்பித்தனா். ஆக மொத்தம் இரண்டு நாள்கள் நடந்த முகாமில் 33,392 விண்ணப்பித்துள்ளனா்.

பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கருவேப்பிலங்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சத்தியவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, திட்டக்குடி வட்டம், பெ.பொன்னேரி தனியாா் பள்ளிகளில் ஞாயிற்றுக்கிழமை நடந்த சிறப்பு முகாம்களை மாவட்ட ஆட்சியா் சிபி ஆத்தியா செந்தில்குமாா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

X
Dinamani
www.dinamani.com