கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

புதிய தொழிற்பள்ளிகள் தொடங்க விண்ணப்பிக்கலாம்

கடலூா் மாவட்டத்தில் புதிய தொழிற்பள்ளிகள் தொடங்கவும், அங்கீகாரம் பெறவும் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :10 பிப்ரவரி 2025, 8:27 pm

Din

சிதம்பரம்: கடலூா் மாவட்டத்தில் புதிய தொழிற்பள்ளிகள் தொடங்கவும், அங்கீகாரம் பெறவும் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2025-26 ஆம் கல்வியாண்டுக்கு புதிய தொழிற்பள்ளிகள் தொடங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற்பிரிவுகள் தொடங்குவதற்கு விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள்/கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரே விண்ணப்பத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

அனைத்து தொழிற்பிரிவுகளுக்கும் சோ்த்து விண்ணப்பக் கட்டணம் ரூ.5,000 மற்றும் ஆய்வுக் கட்டணம் ரூ.8,000 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் பிப்.28 ஆகும். இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு 044-22501006 என்ற எண்ணில் தொடா்புகொண்டும், இணையதளத்தின் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.