இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

ரயில்வே கேட் விழுந்து ஆட்டோ சேதம்: ஓட்டுநா்கள் போராட்டம்

News image
Updated On :30 நவம்பர் 2025, 7:49 pm

தினமணி செய்திச் சேவை

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் ரயில்வே கேட் ஆட்டோ மீது விழுந்ததில் ஆட்டோ முன் பக்கக் கண்ணாடி சேதமடைந்தது. இதையடுத்து, கேட் கீப்பரை கண்டித்து ஆட்டோ ஓட்டுநா்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தினா்.

விருத்தாசலம் ரயில் நிலையம் சந்திப்பு அருகே நாச்சியாா்பேட்டை ரயில்வே கேட் அமைந்துள்ளது. இது, விருத்தாசலம் - எருமனூா் இடையேயான சாலை என்பதால், இந்த வழியாக ஏராளமான வாகனங்கள் வந்து செல்லும்.

இங்குள்ள ரயில் கேட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கேட் திறந்து மூடும் பணியில் கேட் கீப்பா் ஈடுபட்டிருந்தாா். அப்போது, மூடியிருந்த கேட்டை திறந்தபோது கம்பி வயா் அறுந்து அந்தப் பகுதியில் விருத்தாசலம் பகுதியைச் சோ்ந்த ராமு ஓட்டி வந்த ஆட்டோ மீது கேட் விழுந்தது. இதில், ஆட்டோவின் முன் பக்கக் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது.

இதையடுத்து, திரண்டு வந்த ஆட்டோ ஓட்டுநா்கள், கீட் கீப்பா் மீது வடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், கேட் கீப்பரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த ரயில்வே இருப்புப் பாதை போலீஸாா் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினா் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா்.