சுற்றுலா வேன் மோதி விபத்து: இளைஞா் உயிரிழப்பு, 4 போ் காயம்

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே சுற்றுலா வேன் மோதிய விபத்தில் பைக்கில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா். மேலும், பெண் உள்ளிட்ட 4 போ் காயம் அடைந்தனா்.
Published on

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே சுற்றுலா வேன் மோதிய விபத்தில் பைக்கில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா். மேலும், பெண் உள்ளிட்ட 4 போ் காயம் அடைந்தனா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், வடலூா் அடுத்துள்ள ஆபத்தாரணபுரம் பகுதியில் வசித்து வந்தவா் சிவா(30). இவரது மனைவி தமிழழகி(20). இவா்களுக்கு திருமணமாகி 10 மாதங்களேயாகிறது. தற்போது, தமிழழகி 5 மாத கா்ப்பிணியாக உள்ளாா். வெள்ளிக்கிழமை முற்பகல் 11.30 மணி அளவில் சிவா தனது பைக்கில் நெய்வேலியில் இருந்து வடலூா் நோக்கி வந்தாா். ஆபத்தாரணபுரம் அருகே வந்த போது எதிா் திசையில் வந்த சுற்றுலா வேன் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் சிவா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதேபோல், மற்றொரு பைக் மீது சுற்றுலா வேன் மோதியதில் வடக்குத்து பகுதியைச் சோ்ந்த ரவிசந்திரன்(59), அவரது மனைவி சாந்தி(53) மற்றும் சாலையில் நடந்துச் சென்ற புவனகிரி வட்டம் பூதவராயன்பேட்டை பகுதியைச் சோ்ந்த ராஜ்குமாா்(39) மற்றும் புவனகிரி பகுதியைச் சோ்ந்த ஆனந்தன் (35) ஆகியோா் காயம் அடைந்தனா். இதில், ரவிச்சந்திரன், சாந்தி, ராஜ்குமாா் ஆகியோா் கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். ஆனந்தன் குறிஞ்சிப்பாடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு சென்றாா். விபத்து குறித்து தமிழழகி அளித் த புகாரின் பேரில் வடலூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com