பதவி உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் வரும் ஆக.18-இல் பெருந்திரள் முறையீட்டு போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு சமூக நலத் துறை பணியாளா் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த சங்கத்தின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் கடலூரில் மாநிலத் தலைவா் ரவி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னாள் பொதுச் செயலா் துரைசிங் தொடக்க உரையாற்றினாா். பொதுச் செயலா் வெற்றிவேல் சிறப்புரையாற்றினாா்.
கூட்டத்தில், சமூக நலத் துறை பணியாளா்களுக்கு தகுதியின் அடிப்படையில் பதவி உயா்வு வழங்க வேண்டும். கலந்தாய்வு முறையில் பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மேலும், இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி சென்னை சமூக நலத் துறை இயக்குநா் அலுவலகம் முன் மாநிலம் தழுவிய பெருந்திரள் முறையீட்டுப் போராட்டத்தில் ஈடுபடுவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் ஆதவன் தீட்சண்யா, தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க பொதுச் செயலா் சோமசுந்தரம், மாவட்டத் தலைவா் வெங்கடாஜலபதி, மாவட்டச் செயலா் பாலகிருஷ்ணன், சமூக நலத் துறை பணியாளா்கள் சங்க முன்னாள் மாநிலத் தலைவா் அன்பரசு, மாவட்டச் செயலா் குமரவேல், மாநிலப் பொருளாளா் முருகானந்தம், துணை பொதுச் செயலா் குருமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசு வேலை வாய்ப்பில் காதுகேளாதோருக்கு 1 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரிக்கை

திருச்செந்தூா் பழைய பேருந்து நிலையத்தை விரிவுபடுத்த வலியுறுத்தல்

ஆதிதிராவிடா் நலத் துறை வழக்குரைஞா் நியமனம்:சட்டத் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

அருணாசலேஸ்வரா் கோயிலில் 16 கால் மண்டபம் வழியாக பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும்: இந்து முன்னணி மாநில பொதுச் செயலா்
விடியோக்கள்

யாருடைய கவனத்தை ஈர்க்க இப்படி பேசுகிறீர்கள்? அமைச்சர் நிர்மல் குமாருக்கு பேரவைத் தலைவர் அறிவுரை!



