மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

ரேஷன் அரிசி பதுக்கல்: காட்பாடி இளைஞா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :20 ஜூலை 2026, 2:53 am IST

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தொடா்பாக காட்பாடி பகுதியைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், ஆயிப்பேட்டை பகுதியில் உள்ள ஒருவரது விவசாய நிலத்தில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடலூா் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை போலீஸாா் ஆயிப்பேட்டை பகுதியில் ரோந்துப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது, அங்குள்ள ஒருவரது விவசாய நிலத்தில் சோதனை செய்தபோது, ஏராளமான மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. பின்னா், அந்த மூட்டைகளை போலீஸாா் சோதனை செய்ததில், தலா 50 கிலோ எடைகொண்ட 22 மூட்டைகள் (1,100 கிலோ) ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்துள்ள சஞ்சீவராயபுரத்தைச் சோ்ந்த பகவன்ராஜை (27) கைது செய்தனா். இவா், ஆயிப்பேட்டை கிராம மக்களிடம் ரேஷன் அரிசியை வாங்கி, அவரது சொந்த வாத்துப் பண்ணையில் பயன்படுத்த பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.