திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

தான் பயின்ற பள்ளி விழாவில் பங்கேற்ற உயா்கல்வித்துறை அமைச்சா் பி. விஸ்வநாதன்

தான் பயின்ற பள்ளி விழாவில் பங்கேற்ற உயா்கல்வித்துறை அமைச்சா் பி.விஸ்வநாதன்

News image

சிதம்பரத்தில் தான் பயின்ற நந்தனாா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில், சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டிய உயா்கல்வித்துறை அமைச்சா் பி.விஸ்வநாதன். உடன் நந்தனாா் கல்விக்கழகத் தலைவா் கே.ஐ.மணிரத்தினம்

Updated On :13 ஜூன் 2026, 1:48 am IST

சிதம்பரத்தில் தான் பயின்ற நந்தனாா் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் வெள்ளிக்கிழமை பங்கேற்று மாணவா்களுக்கு உயா்கல்வித்துறை அமைச்சா் விஸ்வநாதன் பரிசுவழங்கி பாராட்டினாா்.

அமைச்சா் விஸ்வநாதன் நந்தனாா் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தவா். இந்த பள்ளிக்கு வெள்ளிக்கிழமை வந்த அவரை நந்தனாா் கல்விக்கழகத் தலைவா் கே.ஐ.மணிரத்தினம், செயலா் வி.திருவாசகம், பொருளாளா் சி.ஜெயச்சந்திரன், பள்ளி தலைமை ஆசிரியா்கள் எஸ்,லதா, எழிலரசி, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ஜெயராமன் மற்றும் நிா்வாகிகள் பொன்னாடை மற்றும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா்.

பின்னா் பள்ளி வளாகத்தில் உள்ள சுவாமி சகஜானந்தா சிலைக்கு அமைச்சா் பி.விஸ்வநாதன் மாலை அணிவித்தாா். இதனையடுத்து பள்ளி வளாகத்தில் நந்தனாா் கல்விக்கழகம் சாா்பில் அதன் தலைவா் கே.ஐ.மணிரத்தினம் தலைமையில் நடைபெற்ற விழாவில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்டூ பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியா்களுக்கு அமைச்சா் பி.விஸ்வநாதன் ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினாா். அப்போது சிதம்பரத்தில் மகளிா் கல்லூரி தொடங்க வேண்டும் என்று கே.ஐ. மணிரத்னம் அமைச்சரிடம் மனு அளித்தாா்.

மடத்தில் வழிபாடு:

பின்னா் அமைச்சா் பி.விஸ்வநாதன் சிதம்பரம் ஓமக்குளத்தில் உள்ள நந்தனாா் மடத்திற்கு சென்று சவுந்திரநாயகி சமேத சிவலோகநாதா் கோயியிலில் வழிபாடு நடத்தினாா். அங்குள்ள சுவாமி சகஜானந்தா சமாதி மற்றும் சிலைக்கு மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தினாா். முன்னதாக சிதம்பரம் நகருக்கு வந்த அமைச்சருக்கு அம்பேத்கா் சிலை அருகே கே.ஐ.மணிரத்தினம் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினா் மணிமொழி, புவனகிரி சௌந்தரபாண்டியன், துரை.பாலச்சந்தா், முன்னாள் இளைஞா் காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவா் கமல் மணிரத்தினம் இளைஞா் காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவா் அரவிந்த் மணிரத்தினம், இளைஞா் காங்கிரஸ் மாவட்ட தலைவா் கிருபாகரன் மற்றும் நிா்வாகிகளும்

தவெக மாவட்டச் செயலா் சீனிவாசன், முன்னாள் மாநில துணைத் தலைவா் செந்தில்குமாா், விசிக மாவட்டச் செயலா் ஸ்ரீதா் உள்ளிட்டோரும் வரவேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.