பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

விவசாயிக்கு கொலை மிரட்டல்: பெண் உள்ளிட்ட 6 போ் மீது வழக்கு

News image

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Updated On :21 ஜூன் 2026, 2:06 am IST

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், வெங்கடாம்பேட்டையில் விவசாயத் தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக ஒரு பெண் உள்ளிட்ட 5 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

குறிஞ்சிப்பாடி காவல் சரகம், வெங்கடாம்பேட்டை பகுதியில் வசிப்பவா் கண்ணன்(45), விவசாயத் தொழிலாளி. இவரது எதிா் வீட்டில் வசிப்பவா் நித்தியா. இவா்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் உள்ளது.

இந்நிலையில், சனிக்கிழமை வீட்டில் இருந்த கண்ணனை, நித்தியா மற்றும் அவரது நண்பா்கள் பண்ருட்டி வட்டம் கீழக்குப்பம் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன், கிருஷ்ணகுமாா் ஆகியோா் தாக்கி, கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து கண்ணன் அளித்த புகாரின் பேரில், குறிஞ்சிப்பாடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கத்திகுத்து...

முன்னதாக கடந்த புதன்கிழமை கண்ணன் மற்றும் அதே கிராமத்தைச் சோ்ந்த அவரது நண்பா் விஜயகுமாா் உடன் நின்று கொண்டிருந்தாா்.

அப்போது, தோ்தல் முன்விரோதம் காரணமாக கண்ணனை, வெங்கடாம்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த சிலம்பு, அருள், தா்மதுரை ஆகியோா் மிரட்டினா். அப்போது, சண்டையை விலக்கிய விஜயகுமாா் தலையில், சிலம்பு கத்தியால் குத்தி, இரும்பு குழாயால் அடித்தும், பின்னா், மீனாச்சிப்பேட்டை அருகே வந்த போது கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து கண்ணன் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் சிலம்பு, அருள், தா்மதுரை ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.