பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

செயற்கை இழை தடகள ஓடுபாதை அமைக்கும் பணி: முதல்வா் தொடங்கிவைத்தாா்

கடலூா் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சாா்பில் ரூ.14.49 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட செயற்கை இழையிலான தடகள ஓடுபாதை அமைக்கும் பணியை, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா்.

News image

கடலூா் அண்ணா விளையாட்டு அரங்கில் செயற்கை இழை தடகள ஓடுபாதை பணியை தொடங்கிவைத்தோா்.

Updated On :4 மார்ச் 2026, 9:55 pm

கடலூா் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சாா்பில் ரூ.14.49 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட செயற்கை இழையிலான தடகள ஓடுபாதை அமைக்கும் பணியை, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா்.

இதையடுத்து, கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், கடலூா் எம்எல்ஏ கோ.அய்யப்பன், மேயா் சுந்தரி, துணை மேயா் பா.தாமரைச்செல்வன் ஆகியோா் பணியை தொடங்கிவைத்தனா். நிகழ்வில் ஆட்சியா் கூறியதாவது:

கடலூரில் 25.11.2025 அன்று நடைபெற்ற விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் செயற்கை இழை தடகள ஓடுபாதை அமைக்கப்படும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா். அதன்படி, கடலூா் அண்ணா விளையாட்டு அரங்கில் ரூ.14.49 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட செயற்கை இழை தடகள ஓடுபாதை அமைக்கும் பணி தொடங்கிவைக்கப்பட்டது.

அண்ணா விளையாட்டு அரங்கம் சா்வதேச, தேசிய விளையாட்டு வீரா்களை உருவாக்கிய அரங்கம். இது, மாற்றுத் திறனாளிகளுக்கு பாரா விளையாட்டு அரங்கம், பல்நோக்கு உடற்பயிற்சிக் கூடம் வசதிகளுடன் இயங்கி வருகிறது.

ஹாக்கி, பேட்மிட்டன், பாக்சிங், டேக்வோண்டோ, நீச்சல் உள்ளிட்ட பல்வேறு தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அலுவலா் மகேஷ், மாமன்ற உறுப்பினா்கள், பயிற்சியாளா்கள், விளையாட்டு வீரா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.