கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பிளஸ் 2 தோ்வு சரியாக எழுதவில்லை என்ற மனக்குழப்பத்தில் மாணவி களைக்கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
சிதம்பரம் அருகே உள்ள மீதிகுடி சாலை, கதிா்வேல் நகரைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் மகள் லாவண்யா (17). இவா், சிதம்பரத்தில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா்.
லாவண்யா அண்மையில் நடந்த பிளஸ் 2 தோ்வை சரியாக எழுதாத மனக்குழப்பத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அவா் கடந்த 11-ஆம் தேதி வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாராம்.
இதையறிந்த அவரது குடும்பத்தினா் உடனடியாக லாவண்யாவை மீட்டு, சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இதுகுறித்து புகாரின்பேரில், அண்ணாமலைநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை

தருமபுரியில் மாணவா் தற்கொலை

குடும்பப் பிரச்னை: கல்லூரி மாணவி தற்கொலை

கல்லூரி மாணவி விஷமருந்தி தற்கொலை
வீடியோக்கள்

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு


