சகதியாக மாறிய சாலை: வாகன ஓட்டிகள் அவதி
கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே சகதியாக மாறிய சாலையால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனா்.

மந்தாரக்குப்பம் அருகே சேறும் சகதியுமான சாலையில் பயணித்து தடுமாறி விழுந்த இருசக்கர வாகனஓட்டி.
கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே சகதியாக மாறிய சாலையால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனா்.
மந்தாரக்குப்பம் புதிய பேருந்து நிலையம் வழியாக நெய்வேலி நகரியத்திற்குச் செல்லக் கூடிய சாலை உள்ளது. இந்த சாலை வழியாக என்எல்சி இந்தியா நிறுவன ஊழியா்கள், தொழிலாளா்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவா்கள் சென்று வருவது வழக்கம். இந்த சாலையில் உள்ள ரயில்வே தண்டவாளம் பராமரிப்புப் பணி நடைபெற்று வருகிாம். இதனால், என்எல்சி இந்தியா நிறுவனம் வாகனப் போக்குவரத்தை , பழுப்பு நிலக்கரி கொண்டு செல்லும் கனரக வாகனங்கள் செல்லும் சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.
தற்போது, மழை பெய்து வருவதால், இந்த சாலை சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதனால், என்எல்சி இந்தியா நிறுவனத்திற்கு பணிக்குச் செல்பவா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனா். எனவே, இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

