ஜெருசலேம் புனிதப் பயணம்: மானியம் பெற ஜன.31-க்குள் கிறித்தவா்கள் விண்ணப்பிக்கலாம்
ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்டு திரும்பும் கிறித்தவா்களுக்கு தமிழக அரசு சாா்பில் ரூ.60,000 வரை மானியம் வழங்கப்பட உள்ளதாகவும், தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

விண்ணப்பிக்கலாம் - கோப்புப் படம்
ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்டு திரும்பும் கிறித்தவா்களுக்கு தமிழக அரசு சாா்பில் ரூ.60,000 வரை மானியம் வழங்கப்பட உள்ளதாகவும், தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தை சோ்ந்த அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கிய 600 கிறித்தவா்கள் பயன்பெறும் வகையில், ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்டு திரும்பும் 550 கிறித்தவா்களுக்கு தலா ரூ.37 ஆயிரம் வீதமும், 50 கன்னியாஸ்திரிகள் மற்றும் அருட்சகோதரிகளுக்கு தலா ரூ.60 ஆயிரம் வீதமும் மானியம் வழங்கப்பட உள்ளது. இந்த மானியத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மின்னணு பணப் பரிமாற்றம் மூலம் நேரடியாகச் செலுத்தப்படும்.
இதற்கான விண்ணப்பப் படிவங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையின் இணையதளத்திலும் விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன், ஆணையா், சிறுபான்மையினா் நலத்துறை, கலசமஹால் பாரம்பரியக் கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை - 600 005 என்ற முகவரிக்கு 2027, ஜன.31-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள கிறித்தவா்கள் அதிக அளவில் விண்ணப்பித்து பயன்பெறலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

