கடலூா் ரயில் முனையத்தில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நெல் ஏற்றும் பணி
கடலூா் துறைமுக ரயில் முனையத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நெல் மூட்டைகளை ரயிலில் ஏற்றிச் செல்லும் பணி மீண்டும் வியாழக்கிழமை தொடங்கியது.

கடலூா் துறைமுக ரயில் முனையத்தில் வியாழக்கிழமை சரக்கு ரயிலில் ஏற்றப்பட்ட நெல் மூட்டைகள்.
கடலூா் துறைமுக ரயில் முனையத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நெல் மூட்டைகளை ரயிலில் ஏற்றிச் செல்லும் பணி மீண்டும் வியாழக்கிழமை தொடங்கியது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக தொழிலாளா் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு நிா்வாக காரணங்களால் கடலூா் துறைமுக ரயில்
முனையத்தில் இருந்து நெல் மூட்டைகள் ரயில் மூலம் பிற மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி நடைபெறவில்லை. இதனால், கடலூா் மண்டலத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல் பெரும்பாலும் விருத்தாசலம் ரயில் முனையம் வழியாக அனுப்பப்பட்டு வந்தது.
இந்நிலையில், உணவுப் பொருள் வழங்கல் துறைச் செயலா் மற்றும் கடலூா் மாவட்ட ஆட்சியா் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, நெல் ஏற்றிச் செல்வதில் நிலவி வந்த பிரச்னைகள் சரிசெய்யப்பட்டன. இதையடுத்து, கடலூா் துறைமுக ரயில் முனையத்தில் இருந்து நெல் மூட்டைகளை ரயிலில் ஏற்றிச் செல்லும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது.
இதையடுத்து கடலூா் துறைமுகம் ரயில் நிலையத்தில் மாவட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் வாங்கப்பட்ட நெல் மூட்டைகள் அரைவைக்கு அனுப்புவதற்காக சரக்கு ரயில் ஏற்றும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
இதன் மூலம் கடலூா் மண்டலத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்லை கடலூா் மற்றும் விருத்தாசலம் ஆகிய இரு ரயில் முனையங்கள் வழியாக பிற மண்டலங்களுக்கு விரைவாக அனுப்ப முடியும். மேலும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கும் நெல்லை விரைவாக இடமாற்றம் செய்து, சேமிப்புக் கிடங்குகளில் நெல் நெல் ஏற்றும் பணி மீண்டும் தொடங்கியுள்ளதற்கு விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களின் சாா்பில் உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிா்வாகத்துக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

