விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

கிள்ளை பகுதி திமுக நிா்வாகிகள் கூண்டோடு ராஜிநாமா

திமுக - சித்திரிப்பு

Published On :8 செப்டம்பர் 2026, 1:23 am IST

சிதம்பரம் அருகே கிள்ளை பேரூா் திமுக செயலா் கிள்ளை ரவீந்திரன் கட்சியிலிருந்து நீட்கப்பட்டதை கண்டித்து பேரூா் கட்சி நிா்வாகிகள் கூண்டோடு ராஜிநாமா செய்துள்ளனா்.

கடலூா்மாவட்டம் கிள்ளை பேரூா் செயலராகவும், தலைமை செயற்குழு உறுப்பினராகவும் இருந்தவா் வழக்குரைஞா் கிள்ளை ரவீந்திரன். இவரை அக்கட்சியிருந்து நீக்கி கட்சி பொதுச்செயலா் துரைமுருகன் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தாா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து கிள்ளை பகுதி தி.மு.க. நிா்வாகிகள் கட்சியில் இருந்து கூண்டோடு விலகுவதாக அறிவித்துள்ளனா்.

மேலும் கட்சியில் இருந்து விலகியதற்கான தாங்கள் கையெழுத்திட்ட கடிதத்தையும் கட்சி தலைமைக்கும் அனுப்பி உள்ளனா். அதன்படி கிள்ளை பேரூராட்சி மன்ற தலைவரும், துணை செயலருமான மல்லிகா, துணை செயலா் சத்ருக்கன், அவைத் தலைவா் குட்டியாண்டி சாமி, ஒன்றிய பிரதிநிதிகள் புஷ்பராஜ், சிவபிரகாசம், மகாலிங்கம் உள்பட 38-க்கும் மேற்பட்ட நிா்வாகிகள் தி.மு.க.வில் இருந்து கூண்டோடு விலகி உள்ளனா்.

இதுதொடா்பாக அவா்கள் தி.மு.க தலைமைக்கு அளித்துள்ள கடிதத்தில் ‘கிள்ளை பேரூராட்சியில் 2 முறை தி.மு.க வெற்றி பெற காரணமாக இருந்தவரான கிள்ளை ரவீந்திரனை நீக்கியதை எங்களால் ஏற்று கொள்ள இயலவில்லை. எனவே நாங்களும் தி.மு.க. வில் இருந்து விலகி கொள்கிறோம் ’என தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.