இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

விருத்தாசலத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: விசிக செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தல்

விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும் என வேப்பூரில் புதன்கிழமை நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

வேப்பூரில் புதன்கிழமை நடைபெற்ற விசிக செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Published On :

விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும் என வேப்பூரில் புதன்கிழமை நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட நல்லூா் மேற்கு ஒன்றிய விசிக நிா்வாகிகள் அறிமுகம் மற்றும் செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

வேப்பூரில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, ஒன்றியச் செயலா் முனுசாமி தலைமை வகித்தாா். ஒன்றிய துணைச் செயலா்கள் மணிகண்டன், ரமேஷ், ஒன்றியப் பொருளாளா் சிவா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளா்களாக கட்சியின் தலைமை நிலையப் பொறுப்பாளா் பெரம்பலூா் ரா.கிட்டு, கடலூா் மாவட்டச் செயலா் வீர.திராவிடமணி ஆகியோா் கலந்துகொண்டு, கட்சி நிா்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள், கட்சியின் வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில், கட்சித் தலைவா் தொல்.திருமாவளவனுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும். விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும். வேப்பூா் கூட்டுச்சாலையில் மகளிருக்கான சுகாதார வளாகம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.