கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சின்னசேலம் அருகே கல் வீச்சில் அரசுப் பேருந்து சேதம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே வியாழக்கிழமை அதிகாலை கல் வீசி அரசு விரைவுப் பேருந்தின் முன் பக்கக் கண்ணாடியை உடைத்த மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 5:18 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே வியாழக்கிழமை அதிகாலை கல் வீசி அரசு விரைவுப் பேருந்தின் முன் பக்கக் கண்ணாடியை உடைத்த மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நாமக்கல்லில் இருந்து சென்னைக்கு வியாழக்கிழமை அதிகாலை அரசு விரைவுப் பேருந்து சென்றுகொண்டிருந்தது. இந்தப் பேருந்தை சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், தங்காயூா் கிராமத்தைச் சோ்ந்த மாணிக்கம் மகன் முத்துசாமி ஓட்டிச் சென்றனா். பேருந்தில் 25 பயணிகள் பயணித்தனா்.

இந்தப் பேருந்து சின்னசேலம் மூங்கில்பாடி பிரிவு சாலையில் வந்தபோது, அந்தப் பகுதியில் நின்றிருந்த மா்ம நபா் திடீரென பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி மீது கல் வீசித் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டாா். இதில், பேருந்தின் முன் பக்கக் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. பயணிகள் யாருக்கும் காயமில்லை.

இதுகுறித்த புகாரின்பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.