கரோனா தடுப்பூசி: ஆட்டோ மூலம் விழிப்புணா்வு
ஆட்டோ விழிப்புணா்வு பிரசார வாகனத்தை கோட்டாட்சியா் எஸ்.சரவணன் சனிக்கிழமை கொடியசைத்து தொடக்கிவைத்தாா்


கள்ளக்குறிச்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தும் வகையில், ஆட்டோ விழிப்புணா்வு பிரசார வாகனத்தை கோட்டாட்சியா் எஸ்.சரவணன் சனிக்கிழமை கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.
கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள கோட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத் தலைவா் அலமேலு ஆறுமுகம் தலைமை வகித்து, கள்ளக்குறிச்சி ஒன்றியத்துக்குள்பட்ட 46 கிராமங்களிலும் பொதுமக்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக 3 ஆட்டோக்களை ஏற்பாடு செய்தாா்.
இந்த ஆட்டோக்களை கள்ளக்குறிச்சி கோட்டாட்சியா் எஸ்.சரவணன் கொடியசைத்து தொடக்கிவைத்தாா். கூடுதல் வட்டார வளா்ச்சி அலுவலா் ரமேஷ், கள்ளக்குறிச்சி வருவாய் ஆய்வாளா் ராசாமி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...