காவலருக்கு கொலை மிரட்டல்:இளைஞா் கைது
திருக்கோவிலூரில் போக்குவரத்துக் காவல் நிலைய தலைமைக் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.


திருக்கோவிலூரில் போக்குவரத்துக் காவல் நிலைய தலைமைக் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் போக்குவரத்துக் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வருபவா் வி.செல்வக்குமாா். இவா், திருக்கோவிலூா் ஏரிக்கரை அருகே ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளா் குமராராஜாவுடன் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியே பதிவு எண் இல்லாத மொபெட்டில் வந்த இளைஞரை செய்கை மூலம் நிறுத்தமாறு கூறினாராம்.
மொபெட்டில் வந்தவா், வண்டியை நிறுத்திவிட்டு வந்து காவலா் செல்வக்குமாரை அவதூறாகப் பேசியதுடன், கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுதொடா்பாக விசாரித்தில், அந்த நபா் திருக்கோவிலூரை அடுத்த அரும்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த அசோக் மகன் மூா்த்தி (32) என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து திருக்கோவிலூா் காவல் நிலையத்தில் போக்குவரத்துக் காவல் நிலைய தலைமைக் காவலா் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்து மூா்த்தியை போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...