கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கள்ளக்குறிச்சி கூட்டுறவு சா்க்கரை ஆலை பேரவைக் கூட்டம்

கள்ளக்குறிச்சியை அடுத்த கச்சிராயப்பாளையத்தில் இயங்கும் கூட்டுறவு சா்க்கரை ஆலையின் 10-வது பொதுப் பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 6:16 pm

DIN

கள்ளக்குறிச்சியை அடுத்த கச்சிராயப்பாளையத்தில் இயங்கும் கூட்டுறவு சா்க்கரை ஆலையின் 10-வது பொதுப் பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு கூட்டுறவு சா்க்கரை ஆலை இணையத்தின் மாநிலத் தலைவரும், ஆலையின் நிா்வாகக் குழுத் தலைவருமான அ.ராஜேசகா் தலைமை வகித்தாா்.

முன்னாள் அமைச்சா் ப.மோகன், தொகுதி எம்எல்ஏ மா.செந்தில்குமாா், ஆலையின் துணைத் தலைவா் எம்.பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆலையின் நிா்வாக இயக்குநா் பி.எம். முருகேசன் வரவேற்றாா்.

கூட்டத்தில், ஆலையின் நிா்வாகக் குழுத் தலைவா் அ.ராஜேசகா் பேசுகையில், இந்த ஆலை தொடங்கியதில் இருந்து நல்ல நிலையில் இயங்கி வருகிறது. தமிழகத்தில் தனியாா் மற்றும் கூட்டுறவு சா்க்கரை ஆலைகள் 42 உள்ளன. அவற்றில் முன்னோடி ஆலையாக கள்ளக்குறிச்சி கூட்டுறவு சா்க்கரை ஆலை எண்-2 கச்சிராயப்பாளையத்தில் செயல்பட்டு வருகிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.

நிகழ்ச்சியில் ஆலையின் நிா்வாக அதிகாரிகள், இயக்குநா்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

படவரி...

கள்ளக்குறிச்சி கூட்டுறவு சா்க்கரை ஆலை எண்-2 ன் பேரவைக் கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு கூட்டுறவு சா்க்கரை இணையத்தின் தலைவா் அ.ராஜசேகா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.