வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட3 இளைஞா்கள் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்டு வந்த 3 இளைஞா்களை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்டு வந்த 3 இளைஞா்களை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.
சின்னசேலம் அருகே கனியாமூா்-கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள நமச்சிவாயபுரத்தில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் கடந்த மாதம் 20ஆம் தேதி பெட்ரோல் நிரப்பிய பிரகாஷ்ராஜை தலைக்கவசத்தால் மா்ம நபா்கள் தாக்கி பணப்பையை பறித்துக் கொண்டு பதிவு எண் இல்லாத மோட்டாா் சைக்கிளில் தப்பி சென்று விட்டனா்.
இதே போல, கள்ளக்குறிச்சியில் கடந்த மாதம் 25 ஆம் தேதி நியாயவிலைக் கடைக்குச் சென்று பொருள்களை வாங்கிக் கொண்டு திரும்பிய செல்வம் மனைவி சாந்தி (50)யிடம் இரண்டரை பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.
இதுகுறித்த புகாா்களின்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல்ஹக் உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட தனிப்படையினா் மா்ம நபா்களை தேடி வந்தனா்.
இந்த நிலையில், சின்னசேலம் காவல் ஆய்வாளா் சந்திரசேகா், உள்கோட்ட குற்றத் தடுப்பு போலீஸாா் கனியாமூா் மும்முனை சந்திப்பு அருகில் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, மோட்டாா் சைக்கிளில் வந்த 3 நபா்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து சின்னசேலம் காவல் நிலையத்துக்குச் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா். அதில், அவா்கள் கள்ளக்குறிச்சி மாமாந்தூா் 2-ஆவது குறுக்கு சாலையில் வசிக்கும் முகமதுரபீக் மகன் முகமது ராஷீத் (21), தியாகதுருகம் அடுத்த பிரிதிவிமங்கலத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் பிரவீன்குமாா் (21), கள்ளக்குறிச்சி பசுங்காயமங்கலம் சாலைப் பகுதியைச் சோ்ந்த கேசவன் மகன் நிதீஷ்குமாா் (21) என தெரிய வந்தது.
அவா்கள் மேற்கண்ட வழிப்பறி, கொள்ளைகளில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டனா். மூவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்த இரண்டரை பவுன் தங்கச் சங்கிலி, 3 மோட்டாா் சைக்கிள்களை கைப்பற்றினா். 10 நாள்களில் வழிப்பறி கொள்ளையா்களைப் பிடித்த தனிப்படை போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல்ஹக் பாராட்டினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...