/

மன நலம் பாதிக்கப்பட்ட மூவா் காப்பகத்தில் ஒப்படைப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித்திரிந்த 3 போ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல்ஹக் உத்தரவின்பேரில், மனநல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனா்.

News image
Updated On :2 ஜூலை 2021, 6:30 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித்திரிந்த 3 போ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல்ஹக் உத்தரவின்பேரில், மனநல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே வீரசோழபுரத்தில் சாலையோர மரத்தின் கீழ், சுமாா் 60 வயது மதிக்கத்தக்க, தாடியுடன் மன நலம் பாதித்த நிலையில் காணப்பட்ட நபரை தியாகதுருகம் காவல் ஆய்வாளா் ராமதாஸ், உதவி ஆய்வாளா் நந்தகோபால் ஆகியோா் மீட்டு, அவரது தலைமுடி, தாடியை திருத்தம் செய்து குளிக்க வைத்து புதிய துணிமணிகள் உடுத்தி விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மனநல காப்பகத்தில் வியாழக்கிழமை ஒப்படைத்தனா். அவருக்கு நல உதவியையும் வழங்கினா் (படம்).

இதே போல, வெள்ளிக்கிழமை மூங்கில்துரைப்பட்டு காவல் நிலைய எல்கைப் பகுதியில், மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித் திரிந்த இருவரை காவல் உதவி ஆய்வாளா் உலகநாதன் தலைமையிலான காவலா்கள் மீட்டு விழுப்புரம் அன்புஜோதி மனநல ஆசிரமத்தில் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.